உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

பெரியகுளம்: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ராம்சங்கர் தலைமை வகித்தார். பி.இ.ஓ.,க்கள் ஹெலன் மெடில்டா, வீராச்சாமி முன்னிலை வகித்தனர். சந்திராயன், விக்ரம் லேண்டர், வானம் நீலநிறம், நீருற்று, நிறம் மாறும் நீர், மின் ஆற்றல் இயக்க ஆற்றலாக மாறுதல் உள்ளிட்ட 300 க்கும் அதிகமான படைப்புகளை காட்சிப்படுத்தினர். அதன் செயல்விளக்கங்களை மாணவர்கள் விளக்கினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை ஆசிரியர் கார்த்திகேயன் வழங்கினார். ஆசிரியை திலகவதி நன்றி கூறினார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ