கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி
போடி: போடி சி.பி.ஏ., கல்லூரியில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி கல்லூரி செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடந்தது. முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நடுவர்களாக கல்லூரி பேராசிரியர்கள் அலமேலு, பால்பாண்டி, கோட்டூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் சுரேஷ், ராதிகா பங்கேற்றனர்.போட்டியில் 20 க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் சி.பி.ஏ., கல்லூரி மாணவி பவித்ரா முதலிடமும், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி மாணவி வர்ஷினி இரண்டாம் இடமும், வீரபாண்டி அரசு சட்டக் கல்லூரி மாணவி சரண்யா மூன்றாம் இடமும் பெற்றனர்.கட்டுரை போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி மாணவி பொதிகை மலர் முதலிடமும், ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி சோனியா 2 ம் இடமும், சி.பி.ஏ., கல்லூரி மாணவர் முகமது உமர் மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி உதவி பேராசிரியர்கள் ராதா, அங்கையர் கண்ணி செய்திருந்தனர்.