உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோடு சீரமைக்க வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் முற்றுகை

ரோடு சீரமைக்க வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் முற்றுகை

தேனி: தேனி -- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடப்பதால் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளதை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூ., புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் தேனி தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இந்த ரோட்டில் பல மாதங்களாக ரயில்வே மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளால் போக்குவரத்தை மாற்ற, மதுரை ரோடு தோண்டி குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற ரோடாக மாறியது. இப் பகுதியில் தற்காலிக ரோடு கூட அமைக்காமல் பணி மேற்கொள்கின்றனர். இதனால் டூவீலர் உட்பட பிற வாகனங்களில் செல்வோர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். ரோட்டை சீரமைக்க கோரி இந்திய ஐக்கிய கம்யூ., புரட்சிகர சோசியலிஸ்ட் சார்பில், என்.ஆர்.டி., நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி மாவட்டச் செயலாளர் பெத்தாட்சி ஆசாத் தலைமை வகித்தார். புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாள ராஜதுரை, இந்திய ஐக்கிய கம்யூ., மாவட்ட துணைச் செயலாளர் செல்லன், தேனி தாலுகா செயலாளர் வெள்ளைப்பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். பின் நிர்வாகிகள் உதவிக் கோட்ட பொறியாளர் ரம்யாவை சந்தித்து முறையிட்டனர். அவர் ரோட்டை ஒரு நாள் இரவுக்குள் சீரமைத்து, 11 நாட்களில் புதிதாக ரோடு அமைத்துத்தருவதாக வாக்குறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ