உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துாய அடைக்கல மாதா கற்கோயில் ஆண்டு விழா

துாய அடைக்கல மாதா கற்கோயில் ஆண்டு விழா

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே பழமை வாய்ந்த தூய அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு கற்கோயிலாக மாற்றப்பட்டு, அர்ச்சிப்பு பெருவிழா நடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று ஆலயத்தில் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அடைக்கலமாதா ஊர்வலமாக ஆண்டிபட்டியின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. கிறிஸ்துவர்கள் ஜெபம் மற்றும் பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்றனர். பாதிரியார் முத்து தலைமையில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ