உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிரைண்டிங் மிஷினில் சிக்கி தொழிலாளி பலி

கிரைண்டிங் மிஷினில் சிக்கி தொழிலாளி பலி

தேனி: தேனியில் வெல்டிங் பட்டறையில் கிரைண்டிங் மிஷினில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.தேனி சிவராம்நகர் சோழபாண்டியன் 60. இவர் சுப்பன்தெருவில் வெல்டிங் பட்டறை நடத்துகிறார். இங்கு க.விலக்கு அன்னை இந்திரா நகர் சுலோன் காலனியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சூட்ராயர் 35 பணிபுரிந்தார். இவர் நேற்று மாலை டிராக்டரின் பின்புற டிரெய்லருக்கு இடது புறம் கிரைண்டிங் பாலீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது கிரைண்டிங் மிஷின் தவறி கையில் பட்டு, கிரைண்டிங் வீல் வலதுபுற கழுத்தில் பட்டு அறுந்து ரத்தம் கொட்டி மயங்கினார். அருகில் பணிபுரிந்தவர்கள் தகவலில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆய்வு செய்ததில் இறந்தது தெரியவந்தது. பின் தேனி எஸ்.ஐ., ஜீவானந்தம் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர். இறந்த வெல்டிங் தொழிலாளிக்கு டெய்சி 30, மனைவி, நான்கு வயது மகன் டார்வின் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை