உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவிற்கு கடத்த முயன்ற 124 கிலோ குட்கா, சாராயம், 6 வாகனங்கள் பறிமுதல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 13 பேர் கைது

கேரளாவிற்கு கடத்த முயன்ற 124 கிலோ குட்கா, சாராயம், 6 வாகனங்கள் பறிமுதல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 13 பேர் கைது

போடி:மத்திய பிரதேசம், மண்டலா பகுதியில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட 124 கிலோ குட்கா, சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய 6 வாகனங்களை போடியில் போலீசார் பறிமுதல் செய்து 13 பேரை கைது செய்தனர்.மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதியில் இருந்து கேரளா பூப்பாறை, ராஜாக்காடு, ராஜகுமாரி பகுதிகளில் உள்ள ஏலத் தோட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இவர்கள் புகையிலை, மது, சாராயம் அருந்துவது வழக்கம். தோட்டம் அமைந்துள்ள இடத்திற்கும், கடைக்கும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும். இதனால் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிலர் இவர்களுக்கு குட்கா புகையிலை, சாராயம், மது உள்ளிட்டவைகளை அருகிலேயே வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.மத்தியபிரதேசம், மண்டலா பகுதியைச் சேர்ந்த அமர்ந்குமார் 26, லலித்குமார் 24, பிரேம் குமார் 28, விஜ்ஜால் 35, சிவம் 26, லலித் குமார் 49, முகேஷ் 35, அனீஷ் யாதவ் 30, துளசிராம் 40, அரவிந்த் குமார் 29, தீபக் 40, சஞ்சய் 27, கிருபாசிங் 40 ஆகியோர் குட்காவை கேரளாவில் விற்பனை செய்ய நேற்று காலை போடி - மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் 6 வாகனங்களில் கொண்டு சென்று உள்ளனர். முந்தல் செக் போஸ்டில் போலீசார் வாகன சோதனையில் குட்கா, சாராயம் கொண்டு வந்தது தெரிந்தது. குரங்கணி போலீசார் புகையிலை பொருட்கள், சாராயம் கடத்தி வந்த அஜித்குமார், லலித்குமார், பிரேம்குமார் உட்பட 13 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 124 கிலோ குட்கா, மூன்றரை லிட்டர் சாராயம், 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ