உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முந்தைய பணியிடத்திற்கு திரும்பிய 196 போலீசார்

முந்தைய பணியிடத்திற்கு திரும்பிய 196 போலீசார்

பெரியகுளம்: பெரியகுளம் சப் டிவிஷன் உட்பட 4 போலீஸ் ஸ்டேஷனில் 196 போலீசார்கள்தேர்தலை முன்னிட்டு இரு தினங்களுக்கு வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் முந்தைய போலீஸ் ஸ்டேஷனுக்கு திரும்பினர்.தேனி லோக்சபா தேர்தல் நேற்று முன்தினம் ஏப். 19ல் நடந்தது. ஜுன் 4ல் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு சொந்த தொகுதியில் போலீசார் வேலை செய்யக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவில், பெரியகுளம் சப்- டிவிஷன் வடகரை, தென்கரை, ஜெயமங்களம், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் 196 போலீசார்கள் தேனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி, போடி, கம்பம் சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 18, 19, இரு நாட்களுக்கு தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் பணி மாற்றம் செய்தது. இரு தினங்கள் பணி முடிந்த நிலையில் நேற்று பெரியகுளம் சப்-டிவிஷன் முந்தைய போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார்கள் பணிக்கு திரும்பினர். அதே நேரத்தில் இரு தினங்களாக இங்கு பணியாற்றிய போலீசார்கள் அவர்கள் பகுதிக்கு சென்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ