உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டு பதிவு இயந்திரம் கொண்டு செல்ல குதிரை தர மறுப்பு இயந்திரங்கள் 3 மணி நேரம் காத்திருப்பு

ஓட்டு பதிவு இயந்திரம் கொண்டு செல்ல குதிரை தர மறுப்பு இயந்திரங்கள் 3 மணி நேரம் காத்திருப்பு

பெரியகுளம்: மலைகிராம பகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டு செல்ல குதிரைகள் வழங்காததால் 3 மணிநேரம் காத்திருந்தனர். பின் மாவட்ட திட்ட இயக்குனர் அபிதாகனிப் பேச்சு வார்த்தைக்கு பிறகு குதிரை வழங்கி எடுத்து சென்றனர்.பெரியகுளம் அருகே போடி ஒன்றியம் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி ஊத்துக்காடு உட்பட மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராததால் நேற்று கிராம மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போடி தாலுகா அலுவலகத்திலிருந்து ஊரடி ஓட்டுச்சாவடிக்கு ஓட்டு பதிவு இயந்திரம் மினி லாரி மூலம் மதியம் 2:30 மணிக்கு சோத்துப்பாறை அணை பகுதிக்கு வந்தது. அங்கிருந்து 9 கி.மீ., துார மலைப்பகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் குதிரை மூலம் கொண்டு செல்வது வழக்கம்.போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மலை கிராம மக்கள் குதிரை வழங்க முடியாது என தெரிவித்து கோஷமிட்டனர். தகவல் அறிந்து மாவட்ட திட்ட இயக்குனர் அபிதாகனிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடிப்படை வசதிகள் கோரிக்கை பரிசீலனை செய்து குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதையடுத்து மாலை 5:30 மணிக்கு குதிரை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஊரடி ஓட்டு சாவடிக்கு ஓட்டு பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது. போராடிய மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி