உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஸ்டேஷனில் கையெழுத்திடாத வழிப்பறி குற்றவாளி மீது வழக்கு

ஸ்டேஷனில் கையெழுத்திடாத வழிப்பறி குற்றவாளி மீது வழக்கு

பெரியகுளம் : வழிப்பறி வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவர் தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திடாததால் போலீசார் வழக்குப்பதிந்து தேடுகின்றனர்.திருச்சி பாலக்கரை தர்மநாதாபுரத்தைச் சேர்ந்தவர் மரியசிம்சன் 23. பெரியகுளம் பகுதியில் கடந்தாண்டு வழிப்பறி திருட்டில் ஈடுபட்டார். அவரை தென்கரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் 2024 மார்ச் 7ல் இரு ஜாமின்தாரர்களை ஆஜர்படுத்தி, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். மறு உத்தரவு வரும் வரை மரியசிம்சன் தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் காலை 10:00 மணி, மாலை 5:00 மணி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உத்தரவுகளை பின்பற்றாமல் மரியசிம்சன் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் என தென்கரை சிறப்பு எஸ்.ஐ., காளிதாஸ் புகாரில், எஸ்.ஐ., அனுசுயா வழக்கு பதிந்து, மரியசிம்சனை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ