உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் வழிப்பறி செய்த தமிழகத்தை சேர்ந்தவர் கைது

மூணாறில் வழிப்பறி செய்த தமிழகத்தை சேர்ந்தவர் கைது

மூணாறு : மூணாறில் லாட்டரி விற்பனையாளரின் பணப் பையை பறித்துச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.தமிழகம், புதுக்கோட்டை மாவட்டம் மே மங்கலம் கருங்குழிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரிபுமுகம்மது 19. இவர், மூணாறில் காலனி பகுதியில் தங்கி கடைகளில் வேலை செய்து வந்தார். அவர், நேற்று காலை 9:30 மணிக்கு நகரில் ஜி.எச். ரோட்டில் லாட்டரி விற்பனை நடத்தும் மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட் குருமலை டிவிஷனைச் சேர்ந்த கலைமணி கையில் வைத்திருந்த பணப் பையை பறித்துக் கொண்டு ஓடினார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் அவரை விரட்டிச் சென்று பெரியவாரை ஜீப் ஸ்டாண்டில் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி