மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
16 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
16 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
19 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
19 hour(s) ago
போடி: போடி டி.வி.கே.கே., நகரில் வசிப்பவர் ஞானசுந்தர் 26. இவர் 5 நாட்களுக்கு முன்பு மது குடித்து விட்டு தெருவில் நின்று தகாத வார்த்தையால் பேசி உள்ளார். அதே தெருவைச் சேர்ந்த மதன்குமார் என்பவரின் சித்தி மகன் வீரராஜ் இதனை தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த ஞானசுந்தர் கல்லால் வீரராஜின் தலையில் தாக்கி காயப்படுத்தினார். தகராறை விலக்கச் சென்ற மதன்குமார், பாண்டியராஜ், சேதுராம் ஆகியோரை அடித்து கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டார்.அன்று இரவு மதன்குமார், சேதுராம், கார்த்திக் ஆகியோர் வீட்டின் முன்நிறுத்தி இருந்த டூவீலர்கள் தீ பற்றி எரிந்து முழுவதும் சேதமானது. சி.சி.டி.வி., கேமரா மூலம் பார்த்ததில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் டூவீலரில் அதிகாலை 12:00 மணிக்கு வந்து டூவீலர்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிந்தது. ஞானசுந்தர் தூண்டுதல் பேரில் டூவீலர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதன்குமார் போலீசாரிடம் புகார் செய்தார்.போலீசார் தேவர் காலனியை சேர்ந்த சரண்குமார் 19. என்பவரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago