உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிணற்றை மூடி அமைத்த நாடக மேடையில் பள்ளம்

கிணற்றை மூடி அமைத்த நாடக மேடையில் பள்ளம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், டி.சுப்புலாபுரம் ஊராட்சி பெருமாள்பட்டியில் நாடக மேடையின் தரைதளம் சரிந்ததால் ஏற்பட்டுள்ள பள்ளம் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இப்பகுதியில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.60 லட்சத்தில் 2016 -2017ம் ஆண்டு நாடக மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் இருந்த பொதுக் கிணற்றை மூடி அதன் மேல் தளத்தில் நாடக மேடை அமைத்துள்ளனர். தற்போது நாடக மேடையில் மையப்பகுதி உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தை சுற்றியுள்ள பகுதியும் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருகிறது. விபத்து ஏற்படும் முன் இதனை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கூறியதாவது: கிணறு அமைந்த இடத்தில் பொதுவாக கட்டடங்கள் கட்டுவதில்லை. கிணற்றை மூடிய சில மாதங்களில் நாடக மேடை அமைக்கப்பட்டுள்ளது. மண்ணின் நெகிழ்வு தன்மையால் அப்பகுதியில் பள்ளம் ஏற்படுகிறது. நாடக மேடையில் தற்போது நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி