உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் மீது மரம் சாய்ந்தது; உயிர் தப்பிய பயணிகள்

பஸ் மீது மரம் சாய்ந்தது; உயிர் தப்பிய பயணிகள்

மூணாறு: அடிமாலி நகரில் ஓடிக் கொண்டிருந்த தனியார் பஸ் மீது மரம் சாய்ந்தபோதும் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.இடுக்கி மாவட்டம் அடிமாலியில் கல்லார்குட்டி ரோட்டில் நேற்று மதியம் ரோட்டோரம் இருந்த மரம் திடீரென சாய்ந்தது. அப்போது அந்த வழியில் அடிமாலி பஸ் ஸ்டாண்ட்டை நோக்கி பயணிகளுடன் வந்த தனியார் பஸ் மீது விழுந்தது. கண்ணாடி உள்பட முன்பகுதி சேதமடைந்தது. அதில் ராஜாகாட்டைச் சேர்ந்த ஷீலா காயம் அடைந்தார். பஸ்சின் முன்பகுதியில் மரம் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அடிமாலி தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.இதே மரத்தின் கிளை கடந்த வாரம் முறிந்து ஓடிக் கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது. ஆட்டோ டிரைவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். பலம் இழந்த மரத்தை வெட்டி அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்காததால் மரம் சாய்ந்து பஸ்சின் மீது விழ நேரிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை