உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோடு பணி முடிந்தும் மின் கம்பங்களை மாற்றி அமைக்காததால் விபத்து அபாயம்

ரோடு பணி முடிந்தும் மின் கம்பங்களை மாற்றி அமைக்காததால் விபத்து அபாயம்

போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் விலக்கு - அரசு போக்குவரத்து கழக டெப்போ வரை ரோடு அகலப்படுத்தும் பணி முடிந்து 10 மாதங்கள் ஆகியும் இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.போடி - தேவாரம் ரோடு மேலச்சொக்கரபுரம் விலக்கில் இருந்து போடி அரசு போக்குவரத்து கழக டெப்போ வரை 2 கி.மீ., தூரம் 30 அடி ரோடாக இருந்தது.ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை மூலம் ரோடு அகலப்படுத்திட ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.மேலச்சொக்கநாதபுரம் விலக்கில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக டெப்போ வரை இருந்த 30 அடி ரோட்டை 45 அடியாக அகலப்படுத்தினர். 3 இடங்களில் பாலம், மேலச் சொக்கநாதபுரம் நாக கவுண்டர் ஊருணி ஓடை அருகே தடுப்புச்சுவர், ரோட்டின் இடையே சென்டர் மீடியன் அமைக்கப் பட்டன.பணிகள் முடிந்து 10 மாதங்கள் ஆகியும் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் மாற்றவில்லை.இரவில் வேகமாக வாகனங்கள் ரோட்டில் இடையூறாக உள்ள மின்கம்பங்கள் தெரியாததால் விபத்துகள் ஏற்படுகின்றன.இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைத்திட நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை