உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறு, குறு விவசாயிகள் ஆண்டிற்கு ரூ.1 லட்சம் லாபம் பெற அறிவுரை

சிறு, குறு விவசாயிகள் ஆண்டிற்கு ரூ.1 லட்சம் லாபம் பெற அறிவுரை

தேனி: சிறு - குறு விவசாயிகள் சாகுபடியின் மூலம் ஏக்கருக்கு ஆண்டு வருவாய் குறைந்தது ரூ.1 லட்சம் ஈட்டுவதற்கு, புதிய யுத்திகள், ஆலோசனைகள் பெற தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டத்தின் 8 வட்டாரங்களில் இருந்து வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் பங்கேற்றனர். வேளாண் துணை இயக்குனர் வளர்மதி, தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா தலைமையில் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி இணைப் பேராசிரியர் குருநாதன், திட்டத்தின் நோக்கங்கள், தொழில்நுட்ப உத்திகள், வரைவு தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கினர் இணைப் பேராசிரியர் சக்திவேல் சந்தை விரிவாக்கப்பணிகள் குறித்து பேசினார். வேளாண் அலுவலர் மாசாணம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை