உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுச்சாவடி வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கிடும் பணி நடந்தது.தேனி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தலுக்காக தொகுதிவாரியாக ஒட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.போட் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் தொகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஓட்டுச்சாவடி வாரியாக கணினி குலுக்கல் முறையில் பிரிக்கும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமை வகித்தார். பொதுப்பார்வையாளர் கவுரங் பாய் மக்வானா முன்னிலை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ