உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா

அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார். போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 11,100 வழங்க வேண்டும். கொடிநாள் வசூல் செய்த தொகைக்கு ரசீது வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும். உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாநில செயலாளர் தேன்மொழி, மாவட்ட ராதிகா, அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் சென்னமராஜ், மாவட்ட தலைவர் உடையாழி, பிறத்துறை சங்கத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை