மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
18 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
18 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
21 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
21 hour(s) ago
போடி : தேர்தல் பிரசாரத்திற்கு மின் கம்பத்தில் இருந்து 'கொக்கி' போட்டு மின்சாரம் திருடினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, வேட்பாளரின் செலவு கணக்கில் அபராத தொகை சேர்க்கவும் தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு ஒலிபெருக்கி, மின் விளக்குகள் வைக்க தேவையான மின்சாரத்தை மின்கம்பத்தில் இருந்து நேரடியாக கொக்கி போட்டு திருடும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்று மின்சாரம் திருடுவது சட்டப்படி குற்றமாகும். இதை அந்த கட்சியினர் தங்களது ஆதரவாளர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும் ஓட்டு சாவடிகளில் மின் இணைப்பு முக்கியம் என்பதால் மின்சாரம் உள்ளதா என்பதை சரி பார்த்து வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் பிரசார இடங்களில் மின் இணைப்புகளை கண்காணிக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு உள்ளன.
18 hour(s) ago
18 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago