உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விருதுநகரில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வர ஏற்பாடு

விருதுநகரில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வர ஏற்பாடு

தேனி : தேனி லோக்சபா தொகுதிக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளது.தேனி தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள் பெயர், ஒரு நோட்டா என 16 சின்னங்கள் இடம் பெறும். ஆனால் தேனி தொகுதியில் 25 பேர் போட்டியிடுவதால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 2 ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் 2791ல் கட்டுப்பாட்டு கருவி1676, வி.வி.,பேட் 1765 ஆகியவை இருந்தது. தாலுகா வாரியாக கடந்த வாரம் அனுப்ப பட்டன. ஆனால் தற்போது கூடுதலாக ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவை உள்ளன. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 170 ஓட்டுப்பதிவுஇயந்திரங்கள் கொண்டு வருவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவை இங்கு வந்த பின் அரசியல் கட்சியினர் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ