உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியவர் மீது தாக்குதல்

முதியவர் மீது தாக்குதல்

தேனி, : தேனி வெங்கடாசலபுரம் ராமமூர்த்தி 70. வீடு, நிலம் வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார்.அதே ஊரைச்சேர்ந்த ரவி, அவரது உறவினர் சேதுராமன் என்பவருக்கும் பூர்வீக வீட்டினை விற்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் ராமமூர்த்தி, இவரது மனைவி பத்மாவதி ஆகியோர் ஜங்கால்பட்டி செல்லும் ரோட்டில் சேதுராமனிடம் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த ரவி வீடு விற்பனை செய்ய தடையாக இருக்கிறார் என கூறி ராமமூர்த்தி, பத்மாவதியை தாக்கினார். ராமமூர்த்தி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை