உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

பெண் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

கடமலைக்குண்டு : வருஷநாடு அருகே தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் 38, இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த பழனி என்பவரின் குடும்பத்தினருக்கும் இட பிரச்னை இருந்துள்ளது.இது குறித்து பலமுறை சர்வே செய்தும் பிரச்னை தீரவில்லை. இந்நிலையில் லட்சுமணன் மற்றும் சிலர் தோட்டத்தில் இலவம்பஞ்சு அடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த பழனி, தங்கப்பாண்டி, முருகேஸ்வரி, ராஜபாண்டி, அருண் பாண்டி ஆகியோர் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோரை அசிங்கமாக பேசியதுடன் திவ்யாவை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். லட்சுமணன் புகாரில் பெண்ணை தாக்கிய பழனி உட்பட 5பேர் மீது வருஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ