உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தரிசு நிலத்தில் விவசாயம் செய்தவர் மீது தாக்குதல்

தரிசு நிலத்தில் விவசாயம் செய்தவர் மீது தாக்குதல்

தேவதானப்பட்டி: அரசு வழங்கிய தரிசு நிலத்தில் விவசாயம் செய்த கணேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பெரியகுளம் குள்ளப்புரம் கிழக்கு காலனி போஸ் 62. இவரது மனைவி வைரமணி 57. இவருக்கு தமிழக அரசு 2006ல் தரிசு நிலம் வழங்கியது. இதில் வைரமணி தனது மகன் கணேசனுடன் இணைந்து தரிசு நிலத்தை பதப்படுத்தி சோளப் பயிர் பயிரிட்டு விவசாயம் செய்தார். இதில் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த சுப்பு 'தகரசெட்' அமைத்துள்ளதாகவும், சுப்புவின் நண்பரான முதலக்கம்பட்டியைச் சேர்ந்த மொக்கையன் என இருவரும் அத்துமீறி நுழைந்து, சோளப்பயிர்களை சேதப்படுத்தினர். கணேசன் தட்டி கேட்டதற்கு இருவரும் இணைந்து தாக்கி அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயமங்கலம் போலீசார் சுப்பு, மொக்கையன ஆகிய இருவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ