உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்பு அகற்ற கூறிய செயல் அலுவலர் மீது தாக்குதல்

ஆக்கிரமிப்பு அகற்ற கூறிய செயல் அலுவலர் மீது தாக்குதல்

தேவதானப்பட்டி,:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் இட ஆக்கிரமிப்பை அகற்ற கூறிய செயல் அலுவலர் வேலுச்சாமியை, ஆக்கிரமிப்பாளர் பிரபு கட்டையால் தாக்கினார்.ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் இடத்தை ஆக்கிரமித்து ஓட்டல் கடைகள், குடிசை வீடுகள் அமைத்திருந்தனர். டிச.,28ல் ஹிந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் கலைவாணன், செயல் அலுவலர் வேலுச்சாமி உத்தரவில் தேவதானப்பட்டி போலீசார் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்றனர். சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றினர்.அதன்பின் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் தேவதானப்பட்டியைச் சேர்ந்த பிரபு 28, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தினார். இதனையறிந்த செயல்அலுவலர் வேலுச்சாமி 52, ஆக்கிரமிப்பை அகற்ற கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு, செயல் அலுவலரை கட்டையால் தலையில் அடித்து காயப்படுத்தினார்.பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலுச்சாமி வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினார். தப்பி ஓடிய பிரபுவை தேவதானப்பட்டி போலீசார் தேடிவருகிறார். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ