உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

தேனியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

தேனி, : சர்வதேச போதை ஒழிப்புத் தினம், சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட போலீசார், தனியார் நிறுவனம் சார்பில் போதைப் பொருட்கள் தடுப்பிற்கான சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். விழாவில் ஏ.டி.எஸ்.பி., சுகுமார், டி.எஸ்.பி., பார்த்திபன், கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜூகுமார், நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் கவிப்பிரியா, பாலசங்கா நிறுவன நிர்வாகிகள் கதிரேசன், செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., மாணவர்களுடன் சைக்கிள் ஊர்வலத்தில் வந்தனர். ஊர்வலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கி, மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக பழனிசெட்டிபட்டி சென்றது. பின் மீண்டும் பழனிசெட்டிபட்டியில் இருந்து நேருசிலை வழியாக பெரியகுளம் ரோடு, அல்லிநகரம் சென்று ரத்தினம் நகரில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், போலீசார் போதைக்கு எதிரான உறுதிமொதி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ