உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெல்லுக்கு விலை இல்லாததால் போடி விவசாயிகள் கவலை

நெல்லுக்கு விலை இல்லாததால் போடி விவசாயிகள் கவலை

போடி: போடி பகுதியில் நெல் விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.தற்போது நெல் அறுவடை சீசன் துவங்கியுள்ளது. இப் பகுதியில் நெல் விளைச்சல் அதிகரித்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில் : கடந்த ஆண்டு 60 கிலோ கொண்ட குண்டு ரக நெல் மூடை ரூ.1350 வரையும், சன்னரகம் அக்சயா ரூ1700 ம், நடுத்தரம் ஐ.ஆர்.20., ரூ.1400 முதல் ரூ.1600 வரை விலை இருந்தது. இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகரித்தும் போதிய விலை கிடைக்கவில்லை. தற்போது குண்டு ரக நெல் மூடை 60 கிலோ ரூ. 900 மும், சன்னரகம் ரூ.1600 மும், நடுத்தரம் ஐ.ஆர்.20., மூடை ரூ.1100 முதல் ரூ.1150 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் விலைக்கு வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு நெல்லுக்கு போதிய விலை இல்லாததால் விதைப்பு, மருந்தடிப்பு, அறுவடை கூலிக்கு கூட கட்டுபடியாக நிலை ஏற்பட்டு உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி