உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சொத்து பிரச்னையில் மைத்துனருக்கு கத்திக்குத்து

சொத்து பிரச்னையில் மைத்துனருக்கு கத்திக்குத்து

பெரியகுளம் : பெரியகுளம் அருகே நேருநகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் 28. மாமனார் சின்னவண்டு வீட்டில் மனைவி இந்திரா காந்தியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சின்னவண்டு தனது வீட்டை மகள் இந்திரா காந்தி பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் சின்னவண்டு மகன் சண்முகத்திற்கும் 26. மைத்துனர் கோபாலகிருஷ்ணனுக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இதில் சண்முகம், கோபாலகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சேர்க்கப்பட்டார். வடகரை போலீசார் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை