உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வருஷநாடு அருகே வீட்டில் திருட்டு

வருஷநாடு அருகே வீட்டில் திருட்டு

ஆண்டிபட்டி : வருஷநாடு அருகே முறுக்கோடையைச் சேர்ந்தவர் அஜித் குமார் 27,.காமராஜபுரம் இந்திரா நகரில் கொட்டை முந்திரி தோட்டத்தில் வீடு வைத்துள்ளார். கடந்த மார்ச் 16ல் தோட்டத்தில் இருந்த வீட்டை பூட்டிவிட்டு முறுக்கோடைக்கு சென்று விட்டார். மறுநாள் சென்று பார்த்தபோது கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த நகைகள், வெள்ளிப் பொருட்கள், டி.வி., உண்டியல் பணம், பட்டு சேலைகள் உட்பட ரூ.47 ஆயிரத்து 500 மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து வருஷநாடு போலீசில் புகார் செய்தார். நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதால் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து வருஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை