| ADDED : ஆக 11, 2024 06:11 AM
தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து திடீரென மாற்றம் செய்யப்பட்டது. இதனால் புது பஸ் ஸ்டாண்ட் சென்ற பஸ்கள் பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது.தேனி- மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரண்மனைப்புதுார் விலக்கு முதல் சிப்காட் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் நடந்தது. தற்போது வேளாண் பொறியியல் துறை அலுவலகம் பகுதியில் பணிகள் நடப்பதால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் புதுபஸ் ஸ்டாண்ட், அரசு ஐ.டி.ஐ., வழியாக மதுரை செல்கின்றன. இந்நிலையில் நேரு சிலை பகுதியில் திடீரென நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.மதுரை ரோடு, பெரியகுளம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக கம்பம் ரோட்டிற்கு சென்றன. கம்பம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் மதுரை ரோடு சென்றன. இதனால் பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர். பஸ்சிற்காக ரோட்டில் வெயிலில் காத்திருந்தனர்.கம்பம்ரோட்டில் இருந்து மதுரை ரோட்டில் சென்ற வாகனங்கள், பெரியகுளம் ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக கம்பம் ரோட்டிற்கு சென்ற வாகனங்கள் மோதி கொள்வது போல் இயக்கப்பட்டன. இதனால் சில டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சோதனை முறையில் வழிதடம் மாற்றம் செய்ய சாலை பாதுகாப்பு குழுகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.நகரில் நெரிசலை குறைக்க திட்டசாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.