மேலும் செய்திகள்
பிரபல கடையில் நகை திருடிய பெண் கைது
16-Feb-2025
தேனி,: தேனி மாவட்டம் சின்னமனுாரில் நகைக்கடையில் பணிபுரிந்த போது ரூ.2.65 லட்சம் மதிப்பிலான 5.300 கிலோ வெள்ளி கொலுசுகள், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 5 கிராம் தங்க நகைகளை திருடியதாக ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சின்னமனுார் மின் நகர் உமாராணி. இவர் அங்கு நகைக்கடை நடத்தி வருகிறார். ஜன.31ல் இருப்பு நகைகளை சரிபார்த்த போது வெள்ளி கொலுசுகள் 5.300 கிலோ, தங்க மூக்குத்திகள் இல்லை. இதுகுறித்து கடையில் பணிபுரிந்த சின்னமனுார் முத்துவைரம், சிவசக்தியிடம் கேட்ட போது தங்களுக்கு தெரியாது என கூறினர். பிப்.10ல் இருந்து அவர்கள் வேலைக்கு செல்லவில்லை.இந்நிலையில் இருவரும் கடந்த 6 மாதங்களாக புதிய வெள்ளி கொலுசுகளை வழங்கி, பணம் பெற்று சென்றதாக நகைப்பட்டறை வைத்திருக்கும் ஜெயக்குமார், கடை உரிமையாளர் உமாராணியிடம் தெரிவித்தார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, கொலுசுகளை இருவரும் திருடுவது தெரிந்தது. சின்னமனுார் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
16-Feb-2025