| ADDED : ஜூலை 30, 2024 06:21 AM
தேனி : தேனி அல்லிநகரம் ஹைஸ்கூல் தெரு ஆட்டோ டிரைவர் ஈஸ்வரன் 29. இவர் தனது ஆட்டோவில் அல்லிநகரம் மட்டன் ஸ்டால் தெரு ஜெகதீஸ்குமாரை 30, ஏற்றிக் கொண்டு ஜூலை 27 ல் அவரது வீட்டில் இறக்கிவிட, வீரப்ப அய்யனார் கோயில் ரோட்டில் சென்றார். அப்போது சாவடி ரோட்டில் உள்ள பலசரக்கு கடை அருகே சொக்கம்மன் தெரு தினேஷ் 19, லோகதாஸ் 20, ஆகியோர் ரோட்டை மறித்து நடுரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனால் ஆட்டோ டிரைவர், ஓரமாக நில்லுங்கள்' எனக்கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் திட்டினர். இதனை ஆட்டோ டிரைவர், ஜெகதீஸ்குமார் கீழே இறங்கி தட்டிக் கேட்டனர். தினேஷ்,லோகதாஸ் கல்லால் தாக்கியதில் ஜெகதீஸ்குமார், ஆட்டோ டிரைவர் தலையில் காயம் ஏற்பட்டது. ஜெகதீஸ்குமார் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.