உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை; புலம்பும் உத்தமபாளையம் பொது மக்கள்

15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை; புலம்பும் உத்தமபாளையம் பொது மக்கள்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் பேரூராட்சியில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் மாதத்திற்கு 2 முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப் படுகிறது. வினியோகத்திலும் உள்ள குளறுபடிகளை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வருவது இல்லை என பொது மக்கள் புலம்புகின்றனர்.இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பி.டி.ஆர்., காலனி, இந்திரா காலனி, தென்றல் நகர், அப்துல்கலாம் நகர், தாமஸ் காலனி, மின் நகர், ஜே.பி. நகர் என விரிவாக்க பகுதிகள் அதிகரித்து கொண்டே போகின்றன. லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வாரியமும், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் இருந்து உறை கிணறு அமைத்து 'பம்பிங்' செய்தும் பேரூராட்சி வினியோகம் செய்கிறது.உட்கடை பகுதியாக உ. புதுார், களிமேட்டு பகுதிகளும் உள்ளன. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர சப்ளை செய்யப்படுகிறது. மாதம் இரண்டு முறை, அதுவும் மிக குறுகிய நேரம் மட்டுமே சப்ளை செய்கின்றனர். விநியோகத்தில் நிறைய முறைகேடுகளும், குளறுபடிகளும் உள்ளன. ஜல் ஜீவன் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி மஸ்தூர் பணியாளர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கை எனக் கூறி தண்ணிரை இருப்பு வைக்கக் கூடாது என்று தினமும் கூறுகின்றனர். 15 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்தால், பொது மக்கள் குடிநீரை இருப்பு வைக்காமல் என்ன செய்ய முடியும். எனவே குடிநீர் சப்ளையை சீராக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிமாறன், உத்தமபாளையம் பேரூராட்சியில் ஆய்வு செய்து உடனடியாக குடிநீர் சப்ளையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை