உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டு சதவீதம் அதிகரிக்க பி.எல்.ஓ.,க்களுடன் ஆலோசனை

ஓட்டு சதவீதம் அதிகரிக்க பி.எல்.ஓ.,க்களுடன் ஆலோசனை

தேனி, : லோக்சபா தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைந்த பகுதிகளில் ஓட்டு சதவீதத்தை உயர்த்துவது குறித்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் தேனியில் நடந்தது.கடந்த லோக்சபா தேர்தலில் 50 சதவீதத்திற்கும் ஓட்டு குறைந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அடுத்த தேர்தல்களில் ஓட்டுபதிவு சதவிகிதத்தை உயர்த்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்தந்த பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,க்கள்), கண்காணிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்த உத்தரவிட்டுள்ளது.இதன்படி பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிகளில் ஓட்டு சதவீதம் குறைந்த தலா 50 ஓட்டுச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டன. அப் பகுதி பி.எல்.ஓ.,க்கள், கண்காணிப்பாளர்களுடன் தேனியில் மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேனி தாசில்தார் ராணி தலைமை வகித்தார். துணை தாசில்தார்கள் சதிஸ்குமார், ராஜாராம், கண்ணன் முன்னிலை வகித்தனர். ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வீடுகள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை