உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒற்றை யானை வலம் வருவதால் சுருளி அருவியில் குளிக்க தொடரும் தடை

ஒற்றை யானை வலம் வருவதால் சுருளி அருவியில் குளிக்க தொடரும் தடை

கம்பம் : சுருளி அருவியில் நேற்று முதல் ஒற்றை யானை வலம் வருவதால் குளிக்க தடை விதிக்க்பட்டள்ளது.மேகமலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கை சுட்டிக்காட்டி கடந்த ஜூலை 31 முதல் அருவியில் குளிக்க வனத்துறை நடை விதித்திருந்தது. இதற்கிடையே ஆக. 2 ல் அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தது. எனவே குளிக்க அனுமதிக்கலாம் என்ற நிலையில், அருவி அருகே பாதையில் ஒற்றை யானை ஒன்று நிற்பதை பார்த்து, வனத்துறையினர் பின் வாங்கினர். குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளது.நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகம் வரும் என்று அதிகாலையில் வனத்துறையினர் அருவிக்கு சென்ற போது , அருவிக்கு செல்லும் வழியில் பாத்ரூம் அருகில் யானை நிற்பதை பார்த்துள்ளனர். எனவே குளிப்பதற்கு தடை தொடர்வதாக அறிவித்துள்ளனர். நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் பொதுமக்கள் திரளாக வந்து அருவியில் குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையே இன்று காலை சுருளி அருவியில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை