மேலும் செய்திகள்
'முதல்வர் பயணத்தால் பின்னடைவு'
29-Aug-2024
போடி:''தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடப்பது தான் தி.மு.க., ஆட்சியின் சாதனையாக உள்ளது,'' என, தேனி மாவட்டம் போடியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்று உள்ளார். எந்த அளவிற்கு நிதியை கொண்டு வந்து சேர்க்கிறார், எந்த அளவுக்கு தமிழகத்திற்கு அது பயன் அளிக்கும் என்பது நடைமுறைக்கு வந்தால் வாழ்த்துகிறேன்.பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய அரசின் கடுமையான சட்டங்கள் தேவை. மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டு வருவதுடன் அனைத்து மாநிலங்களிலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு குறைவாக நிதி வழங்கி உள்ளதாக சொல்கிறார்கள். போதுமான நிதி, போதுமான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.தி.முக., ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதைப் பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கைகளிலும் தாராளமாக கிடைக்கிறது என்றார்.
29-Aug-2024