உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரட்டை ஓட்டு மா.கம்யூ., செயல்: காங்., வேட்பாளர் குற்றச்சாட்டு

இரட்டை ஓட்டு மா.கம்யூ., செயல்: காங்., வேட்பாளர் குற்றச்சாட்டு

மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட உடும்பன்சோலை ஊராட்சியில் இரட்டை ஓட்டுகள் உள்ளது மா.கம்யூ.,வின் திட்டமிட்ட செயல் என காங்., கூட்டணி வேட்பாளர் டீன்குரியாகோஸ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது., உடும்பன்சோலை ஊராட்சியில் இரட்டை வாக்காளர்கள் உள்ளதாக தெரியவந்தது. அது மா.கம்யூ., வின் திட்டமிட்ட செயல். இதற்கு முன்பும் மா.கம்யூ., தேர்தலை சீர்குலைக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும். இது போன்ற செயல்கள் ஜனநாயகத்திற்கு பெரும் இழுக்கு. பிற மாநிலங்களில் ஓட்டுரிமை உள்ளவர்களுக்கு, இங்கு ஓட்டுரிமை உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்க வேண்டும்.இரட்டை ஓட்டுகளை கண்டறிவதற்கு காங்., கூட்டணி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அறிக்கை தாக்கல் செய்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி