மேலும் செய்திகள்
வரதட்சணை கொடுமை கர்ப்பிணி தற்கொலை
07-Sep-2024
போடி : போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் பிரியங்கா 27. இவருக்கும் பழனிசெட்டிபட்டி வாசவி காலனியில் வசிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தில் வரதட்சணையாக 40 பவுன் நகை, ராதாகிருஷ்ணனுக்கு 50 கிராமில் காப்பு, மோதிரமும், ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் பாத்திரங்களை பிரியங்கா குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். பிரியங்கா, கணவர் ராதாகிருஷ்ணன், மாமனார் கிருஷ்ணன் ராமானுஜம், மாமியார் பத்மா, இவரது தாயார் கோசலை, நாத்தனார் ரம்யா, இவரது கணவர் மோகன்ராஜ் ஆகியோர் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது தாய், தந்தை பேச்சை கேட்டு பிரியங்கா உடன் சேர்ந்து வாழாமலும், அப்படி வாழ வேண்டும் என்றால் 50 பவுன் நகையும், ரூ.2 லட்சத்தி 50 ஆயிரம் கேட்டு கொடுமைப் படுத்தி உள்ளனர்.பிரியங்கா புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார், கணவர் ராதாகிருஷ்ணன், மாமனார் கிருஷ்ணன் ராமானுஜம், மாமியார் பத்மா உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
07-Sep-2024