மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
14 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
14 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
17 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
17 hour(s) ago
கம்பம் : ஆக்சன் சென்டர்களுக்கு ஏலக்காய் வரத்து குறைந்து வருவதால், விலை உயர்ந்து சராசரி விலை கிலோவிற்கு ரூ.2600 வரை உயர்ந்துள்ளது.இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. மகசூல் குறைவது, சீதோஷ்ண நிலை மாற்றத்தால் செடிகளில் நோய் தாக்குவது, பொருளாதார ஸ்திரதன்மையின்மையால் விலை குறைவு போன்ற காரணங்களால் ஏல விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் பிரச்னைகள் உள்ளது.இந்தாண்டு கடும் வெப்பம் நிலவியதால் செடிகள் சேதமானது. தற்போது மழை கிடைத்தாலும் பயனில்லாத நிலை உள்ளது. அடுத்த சீசன் இயல்பாக ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கும். ஆனால் இந்தாண்டு செப்டம்பர் இறுதியில் தான் சீசன் துவங்கும் என்கின்றனர்.இதனால் ஏல மையங்களுக்கு வரத்து 25 ஆயிரம் கிலோ முதல் 40 ஆயிரம் கிலோ வரை குறைந்துள்ளது. இயல்பாக 75 ஆயிரம் கிலோ வரை வரத்து இருக்கும். இதனால் விலை ரூ.1000ல் இருந்து உயர்ந்து ரூ. 2600 வரை உயர்ந்துள்ளது. இன்னமும் விலை உயரும் என்கின்றனர். ஆனால் ஏல விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை என்கின்றனர் விவசாயிகள்.
14 hour(s) ago
14 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago