உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணியில் உறங்கிய ஊழியர்கள் சஸ்பெண்ட்

பணியில் உறங்கிய ஊழியர்கள் சஸ்பெண்ட்

மூணாறு : மூணாறில் அரசு பஸ் டிப்போவில் பணியின்போது உறங்கிய இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில், பயணிகள் எவ்வித தகவலும் பெற இயலவில்லை என்பது உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது குறித்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த போக்குவரத்து கழக விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு பிப்.16 இரவில் டிப்போவில் பரிசோதனை நடத்தினர்.அதில் இரவு நேர பணியில் ஈடுபட்ட ஸ்டேஷன் மாஸ்டர் வி. வி. மனோஜ் மற்றும் பட்ஜெட் டூரிசம் பொறுப்பாளர் மனோஜ் ஆகியோர் பணியின் போது உறங்கியதாக தெரியவந்தது.அதன் அறிக்கையை விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள், போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரிடம் தாக்கல் செய்தனர். அதன்படி அவர் இருவரையும் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை