உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடும் வெப்பத்தால் கருகும் வெற்றிலை கொடிகள் வருவாய் இழப்பால் விவசாயிகள் பாதிப்பு

கடும் வெப்பத்தால் கருகும் வெற்றிலை கொடிகள் வருவாய் இழப்பால் விவசாயிகள் பாதிப்பு

சின்னமனூர்: சின்னமனூர் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெற்றிலை கொடிகள் கருகி வருகிறது. இதனால் விவசாயிக்கு நஷ்டம் ஏற்படுவதாக சாகுபடியாளர்கள் புலம்புகின்றனர்.மாவட்டத்தில் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, கம்பம் உள்ளிட்ட பல ஊர்களில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது. பெரியகுளம் வட்டாரத்தில் வெள்ளை வெற்றிலையும், சின்னமனூர் வட்டாரத்தில் கருப்பு வெற்றிலையும் சாகுபடியாகிறது. தற்போது வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.280க்கும், கருப்பு வெற்றிலை கிலோ ரூ.200 என விலை கிடைத்து வருகிறது.கருப்பு வெற்றிலை விலை மேலும் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.இந்நிலையில் இரண்டு வாரங்களாக நிலவும் கடும் வெப்பம் காரணமாக சின்னமனூர் வட்டாரத்தில் வெற்றிலை கொடிகள் கருகத் துவங்கி உள்ளது. இதனால் வெற்றிலை பறிக்க முடியவில்லை. மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வெற்றிலை கொடிகளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு மகசூல் கிடைக்கும். 25 நாட்களுக்கு ஒரு முறை வெற்றிலை பறிப்பார்கள். ஆண்டிற்கு 12 முறை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது நிலவும் வெப்பம் காரணமாக 10 மாத கொடிகள் கருக துவங்கி உள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்குரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.முன்னோடி வெற்றிலை விவசாயி ரவி கூறுகையில், கற்றாழை பூச்சி தாக்குதலால் தான் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் வெப்பமும் காரணம். முன்பு அதிக மழை, அதிக வெப்பம் என்ற சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும், வெற்றிலை கொடிகள் கருகி வருகிறது. இந்த கொடிகளை அகற்றி விட்டு, புதிய கொடிகள் தான் நடவு செய்ய வேண்டும். இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை