உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீ தடுப்பு பயிற்சி

தீ தடுப்பு பயிற்சி

தேனி, ஜூன் 2– மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் ஜூன் 6, 7 ல் பொது மக்களுக்கு  இலவசமாக தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.   இதற்கு முன்பதிவு, அடையாள அட்டைகள் ஏதும் வேண்டாம். தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது பற்றி விவரிக்கப்படும் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ், உதவி தீயணைப்பு அலுவலர் குமரேசன் தெரிவித்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி