| ADDED : ஏப் 04, 2024 11:51 PM
தேனி : தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம்,சோழவந்தான்(தனி), உசிலம்பட்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் சேர்த்து 11.20 லட்சம் வாக்காளர்கள் உள்ளன. இதில் முதன்முதலாக ஓட்டளிக்க உள்ள வாக்காளர்கள் ஆண்கள் 9430, பெண்கள் 7960 பேர், இதரர் 2 பேர் என மொத்தம் 17,392 பேர் ஆகும். இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் 4617, பெரியகுளத்தில் 4129, போடியில் 4476, கம்பத்தில் 4170 பேர் ஆவர். அதேபோல் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 10,910 பேர் உள்ளனர். இதில் கம்பம் தொகுதில் 3195 முதியவர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 20 வயது முதல் 85 வயதிற்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 10.91 லட்சம் ஆகும்.