மேலும் செய்திகள்
பள்ளி கல்லுாரி செய்திகள்..
03-Mar-2025
கம்பம்,: காமயகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தலைமையாசிரியை ராஜாத்தி தலைமையில் நடந்தது. மேலாண்மை குழு உறுப்பினர் ஜேப்பியார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் நாகராசன் வரவேற்றார். முன்னாள் வட்டார கல்வி அலுவலர் விஜயா, ஆசிரியை நாகஜோதி குத்து விளக்கு ஏற்றினார்கள். பேரூராட்சி தலைவர் வேல்முருகன், புலவர் அரங்கசாமி, முன்னாள் தலைமையாசிரியர் மணிகண்டன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாரத ராணி, ஆசிரிய பயிற்றுநர் அருணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் முன்னாள் மாணவர் உதயக்குமார் , தனது பெற்றோர் நினைவாக பள்ளி வளாகத்தில் கலையரங்கம் கட்ட ரூ.2 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.
03-Mar-2025