மோசடி: ஒருவர் மீது வழக்கு
போடி : போடி அருகே எஸ்.தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி 51. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் உத்தமபாளையம் முகமதியர் நடுத் தெருவில் வசிக்கும் காஜாமமைதீன் என்பவர் மனைவியின் மருத்துவ செலவிற்காக பாங்க் கணக்கு மூலம் தவணை முறையில் ரூ.15 லட்சத்தி 89 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்தை திரும்ப தராமல் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி வந்துள்ளார். திருப்பதி புகாரில் போடி தாலுாகா போலீசார் காஜாமைதீன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.