உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பஸ் ஜன்னல் கண்ணாடி உடைந்த நிலையில் பயணம்

அரசு பஸ் ஜன்னல் கண்ணாடி உடைந்த நிலையில் பயணம்

தேனி: தேனியில் இருந்து போடி செல்லும் அரசு பஸ்சின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடியும், அதன் மேற்பகுதியும் சேதமடைந்து உடைந்துள்ளதால் பயணிகள் அச்சத்துடன் பயணித்தனர்.நேற்று காலை தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டடில் இருந்து போடிக்கு (டி.என்.57, என்.1985) என்ற அரசு பஸ் புறப்பட தயாரானது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சின் உட்புறத்தில் வலதுபுற கண்ணாடி ஜன்னல் சேதமடைந்து உடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் பயணிகள் உள்ள சீட்களில் உட்காராமல் அருகில் உள்ள சீட்களில் அச்சத்துடன் அமர்ந்து பய்ணித்தனர். பஸ் புறப்பட்டதும் கண்ணாடி ஜன்னல் கிடு,கிடுவென ஆடி யார் மீது விழுமோ என்ற அச்சத்துடன் பயணித்தனர். மேலாளர் பஸ்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை