உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவியை கொலை செய்த கணவர் கைது

மனைவியை கொலை செய்த கணவர் கைது

மூணாறு : இடுக்கி மாவட்டம் அடிமாலி வாளரா அருகே ஜந்தாம்மைல்குடியில் மனைவியை கத்தியால் குத்தி கணவர் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.அடிமாலி அருகே ஐந்தாம்மைல்குடியில் பாலகிருஷ்ணன், ஜலஜா 43, ஆகியோர் முதல் திருமணத்தை கைவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன், மனைவியாக சேர்ந்து வசித்தனர். கோதமங்கலத்தில் ஜலஜா ஹோம் நர்ஸ் ஆக பணியாற்றினார். வழக்கம் போல் நேற்று முன்தினம் தினம் பணி முடிந்து வீட்டிற்கு வந்த ஜலஜாவிடம் மது போதையில் இருந்த பாலகிருஷ்ணன் சம்பளம் பணத்தை கேட்டு தகராறு செய்தார். இருவர் இடையே வாக்குவாதம் முற்றியதால் மது போதையில் இருந்த பாலகிருஷ்ணன் ஆத்திரத்தில் சுத்தியலால் ஜலஜாவில் தலையில் தாக்கினார். அதன் பிறகு கத்தியால் குத்தினார். அதில் சம்பவ இடத்தில் ஜலஜா இறந்தார். இரவு முழுவதும் ஜலஜாவின் பிணத்துடன் தங்கி இருந்தவரை அடிமாலி இன்ஸ்பெக்டர் பிரின்ஸ்ஜோசப் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை