உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேர்தல் நடத்தை விதி அமல்: சிலம்பம், தப்பாட்டத்திற்கு தடை; அம்பேத்கர் பிறந்த நாள் விழா ஆலோசனையில் முடிவு

தேர்தல் நடத்தை விதி அமல்: சிலம்பம், தப்பாட்டத்திற்கு தடை; அம்பேத்கர் பிறந்த நாள் விழா ஆலோசனையில் முடிவு

பெரியகுளம் : தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவிற்கு வருபவர்கள் சிலம்பம், தப்பாட்டம், வெடி வெடிக்க கூடாது என கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம், வடகரை போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி.,சூரக்குமாரன் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் வெள்ளையப்பன், அமுதா, பாஸ்டின் தினகரன் முன்னிலை வகித்தனர். வி.சி., கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக், முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நகர செயலாளர் ஜோதி முருகன், சட்டசபை தொகுதி செயலாளர் சுசி தமிழ் பாண்டியன் மற்றும் ஊர் தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் தப்பு அடித்தும், சிலம்பம் சுற்றியும், அக்னிசட்டி, முளைப்பாரி, பால்குடம் எடுத்து வரக்கூடாது. பட்டாசு வெடிக்கவும், மதுபோதையில் மாலை செலுத்த வருபவர்களுக்கு அனுமதி இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட நேரத்தில்தான் கட்டாயம் வர வேண்டும். காலையில் வந்தவர்கள் மாலையில் திரும்பவும் வரக்கூடாது. கையில் எந்த ஒரு ஆயுதமும் இருக்கக் கூடாது குறிப்பாக மூங்கில் கம்பு எடுத்து வரக்கூடாது. சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிக்கொண்டு வரக்கூடாது. அனைத்து நிகழ்ச்சிகளும் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் முடிக்க வேண்டும்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பிளக்ஸ் பேனர்கள், வால்போஸ்டர்கள் வைக்க அனுமதி இல்லை உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்