உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரவிகுளம் தேசிய பூங்கா இன்று திறப்பு; வரையாடுகளை காண அனுமதி

இரவிகுளம் தேசிய பூங்கா இன்று திறப்பு; வரையாடுகளை காண அனுமதி

மூணாறு : இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகளின் பிரசவம் முடிவுக்கு வந்ததால், பூங்கா இன்று (ஏப். 1) திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் உள்ள அபூர்வ இன வரையாடுகளை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.அவற்றின் பிரவச காலம் பிப்ரவரியில் துவங்கி மார்ச் இறுதி வரை நீடிக்கும். அப்போது இரவிகுளம் தேசிய பூங்கா மூடப்பட்டு ராஜமலைக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்படும்.அதன்படி கடந்த பிப்., ஒன்று முதல் பூங்கா மூடப்பட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது வரையாடுகளின் பிரசவம் முடிவுக்கு வந்ததால் இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பிறகு இன்று (ஏப்.1) பூங்கா திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.அறிமுகம்: ராஜமலையில் வரையாடுகளை காண தினமும் 2800 பயணிகள் மட்டும் அனுமதிக்கின்றனர். 'ஆன் லைன்' வாயிலாகவும், ராஜமலைக்குச் செல்லும் நுழைவு பகுதியான 5ம் மைலில் நேரடியாகவும் டிக்கெட் பெற்று செல்லலாம். தற்போது 'வாட்ஸ் ஆப்' வழியாக க்யூ.ஆர்., கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கட்டணம்: நபர் ஒன்றுக்கு ரூ.200, பள்ளி மாணவர்களுக்கு ரூ.150, வெளிநாட்டினருக்கு ரூ.500. பார்வை நேரம்: காலை 8:00 முதல் மாலை 4:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ