மேலும் செய்திகள்
ஜெ., பிறந்தநாள் விழா ரத்த தான முகாம்
23-Feb-2025
தேனி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்பதால் 10ஆயிரம் தொண்டர்கள் அமர வசதி செய்ப்படுகிறது. தேனி அருகே மதுராபுரி விலக்கில் மார்ச் 2ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார். விழாவிற்கான முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், செல்லுார் ராஜூ, உதயகுமார் பங்கேற்றனர். நிகழ்வினை மாவட்ட செயலாளர்கள் ராமர், ஜக்கையன் ஒருங்கிணைத்தனர். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், அமைப்பு செயலாளர் மகேந்திரன், அம்மா பேரவை இணைச்செயலாளர் ஜெயக்குமார், ஐ.டி.பிரிவு மண்டல துணைத்தலைவர் பாலசந்தர், கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் முத்துலட்சுமி, சோலைராஜ், முருகன், ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், நாராயணசாமி, ராஜகுரு,மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சற்குணம், இளையநம்பி, கூடலுார் நகர செயலாளர் அருண்குமார், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயலாளர் தீபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பொதுக்கூட்டம் இடம் 8 ஏக்கர் பரப்பில் உள்ளது. இதில் தொண்டர்கள் அமர்வதற்கு 10ஆயிரம் இருக்கைகள், வாகனங்கள் நிறுத்த 3 இடங்கள், அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
23-Feb-2025