உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ்கள் செல்ல மறுக்கும் கடமலைக்குண்டு பஸ் ஸ்டாண்ட்

பஸ்கள் செல்ல மறுக்கும் கடமலைக்குண்டு பஸ் ஸ்டாண்ட்

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டில் பஸ் ஸ்டாண்ட் இருந்தும் அரசு, தனியார் பஸ்கள் உள்ளே சென்று திரும்பாததால் வெறிச்சோடி கிடக்கிறது.கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷன் அருகே பல ஆண்டுக்கு முன் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. கடமலைக்குண்டு வழியாக மயிலாடும்பாறை, வருஷநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, முத்தாலம்பாறை உட்பட பல கிராமங்களுக்கு பஸ் வசதி உள்ளது. கடமலைக்குண்டை கடந்து செல்லும் பஸ்கள் அனைத்தும் பஸ்ஸ்டாண்ட் முன்பு மெயின் ரோட்டில் நின்று ஆட்களை ஏற்றி இறக்கி செல்கிறது. இதனால் பலருக்கும் இடையூறு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் செயல்படும் என்ற நம்பிக்கையில் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை பலரும் வாடகைக்கு எடுத்துள்ளனர். பஸ்கள் உள்ளே சென்று திரும்பாததால் கடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் சென்று திரும்ப ஊராட்சி நிர்வாகம், போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை