உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

கூடலுார் : 'கூடலுார் நகராட்சி நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் நாளை முதல் (மார்ச் 4) 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கூடலுார் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் ஆகிறது. தற்போது நகராட்சிக்கு தனியாக ஒப்படைப்பு செய்யப்பட்டு பம்பிங் ஸ்டேஷன், நீர்த்தேக்க தொட்டிகளை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது.இந்நிலையில் நீர்த் தேக்க தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என நகராட்சி கமிஷனர் கோபிநாத் தெரிவித்துள்ளார். இதனால் சேமித்து வைத்துள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, அவர் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை